Saturday, November 3, 2018

மஹிந்த பக்கம் தாவி அமைச்சரானவரின் இல்லத்தில் ஐ.தே.க. எம்.பிக்கள்! – வெளியாகிய சி.சி.ரி.வி படங்கள்!

SHARE

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றியதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷ பக்கம் தாவி  அமைச்சராக பதவியேற்ற வசந்த சேனநாயக்கவின் கொழும்பு இல்லத்தில் பேசிக்கொண்டிருக்கும் சி.சி.ரி.வி. படங்கள் வெளியாகியுள்ளன.

நேற்றுக்காலை நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இடம்பெற்ற சந்திப்பில் பங்கேற்ற 118 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவர்களும் அடங்குவர். இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் நேற்றுக்காலை 11.30, 11.40  மற்றும் பிற்பகல் 12.29 மணியளவில் இவர்கள் வசந்த சேனநாயக்கவின் வீட்டில் இருந்துள்ளமை சி.சி.ரி.வி. காணொளிகள் மூலம் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகரான டி.எஸ்.சேனநாயக்கவின் பேரன் வசந்த சேனாநாயக்கவை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கொண்டுவரும் வகையில் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினரா அன்றேல் வேறேதும் விடயங்கள் ஆராயப்பட்டனவா போன்ற உத்தியோகபூர்வ விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.



SHARE