Tuesday, December 4, 2018

“இந்தியன் 2” படத்துடன் சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் கமல்!

SHARE

ஷங்கருடன் ‘இந்தியன் 2’ வை முடித்த கையோடு சினிமாவை விட்டு முடிவு பெறுவதாக கமல் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தனது ‘மக்கள் நீதி மய்யம்’ என்னும் அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த கமல், ரஜினியோடு ஒப்பிடுகையில் மிகவும் பரபரப்பாகவே அரசியல் செய்து வருகிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக தூத்துக்குடி முதல் கஜா புயல் வரை களத்தில் இறங்கி வேலைசெய்தார். பல கிராமப் பஞ்சாயத்துக் கூட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தி ஆச்சரியமூட்டினார்.

ஆனாலும் சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் அவர் எப்போது இறங்குவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்துகொண்டே இருந்தது. அதிலும் இந்தியன் பார்ட் 2′ அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், அவர் சொல்லாமலே ‘தேவர் மகன்2’, ‘புன்னகை மன்னன்2’ என்று  வரிசையாகக் கிளப்பிவிடப்பட்டன.

இந்த வதந்தியாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இந்தியன்2’ தான் தனது கடைசிப் படம் என்றும், அதற்குப் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருப்பதாகவும் இன்று கமல் அறிவித்திருக்கிறார். சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்ற அவரது அறிவிப்பு அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
SHARE