Saturday, December 29, 2018

A/L பரீட்சைப் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வௌியிடப்படும்!

SHARE

கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (29) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

இப்பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk எனும் திணைக்களத்தின் இணையத்தள முகவரியில் மாணவர்கள் பார்வையிட முடியும்.
SHARE