Wednesday, December 26, 2018

யாழ்.பல்கலையில் சுனாமி நினைவேந்தல்!

SHARE

சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் 14 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை காலை யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இவ் அஞ்சலி நிகள்வில் பிரதான சுடரை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஏற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் தீபங்களை ஏற்றி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலித்தனர். 





SHARE