Sunday, December 30, 2018

வவுனியாவுக்குப் பெருமை சேர்த்த விவசாயியின் மகன்!

SHARE

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன.

வர்த்தகப் பிரிவில் வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவன் துரைராஜா யுகதீஸ்வரன் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 143 ஆவது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியா மூன்று முறிப்பைச் சேர்ந்த யுகதீஸ்வரனின் தந்தை ஒரு விவசாயி என்பதுடன் வறுமை சாதனைக்கு ஓர் தடையல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

கடந்த வருடமும் மூன்று முறிப்பைச் சேர்ந்த மாணவனே வர்த்தகப் பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
SHARE