Saturday, December 8, 2018

பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

SHARE

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று  நடத்தப்பட்டுள்ளது.

பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு- காந்திபூங்காவில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கூறுகையில், “நாட்டில் இனிமேல் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறாத வண்ணம் உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கொலையாளிகள் தங்களது தவறை உணர்ந்து தாமாகவே சரணடையும் இயல்பு நிலைமை நாட்டில் ஏற்படும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை டொலர்களுக்கு சமாதானத்தினை அழிக்காதே, வடக்கு- கிழக்கின் அமைதியில் கை வைக்காதே, சமாதானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தினை நடைமுறைப்படுத்து, சமாதானத்தினை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றுகூடுங்கள் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை அவர்கள் முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


SHARE