Sunday, December 2, 2018

புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்துடன் ரயில் மோதி விபத்து!

SHARE

ரயில் கடவையை கடக்க முற்பட்ட பட்டா வாகனத்தை ரயில் மோதி விபத்துக்குள்யான போதும்  சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றது.

மகேந்திரா ரக பட்டா வாகனத்தின் பின்பகுதியில் ரயில் மோதியது. அதனால் பட்டாவாகனம் வீதிக்கு தள்ளப்பட்டது. எனினும் சாரதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் பெருமளவானோர் கூடினர்.SHARE