Tuesday, December 18, 2018

கிளிநொச்சியில் கடும் பனி – மக்கள் சிரமம்!

SHARE

கிளிநொச்சி மாவட்டம் கடந்த சில நாட்களாக அதிக பனிமூட்டத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் கால நிலையில் கடந்த சில நாட்களாக  மாற்றம்  ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டம் தற்போது அதிக பனி மூட்டத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டத்தின் பல பிரதேசங்கள் காலை ஏழு மணியை கடந்தும்  பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுகின்றது.

காலை கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காண முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதோடு  வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு காலை வேளைகளில் அதிக குளிராக காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.















SHARE