Friday, December 7, 2018

பால்நிலை வன்முறைக்கு எதிராக யாழில் அமைதிப் பேரணி!

SHARE

பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் பதின்நான்கு நாள் செயற்றிட்டத்தை முன்னிட்டு (பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 25 நவம்பர தொடக்கம் டிசம்பர் 10: மனித உரிமைகள் தினம் வரை) ஒவ்வொரு வருடமும்  உலகில்  16 நாட்கள்  அனுஷ்டிக்கப் படுகின்றது  . அந்த 16 நாட்கள் குறித்து பெண்கள் மற்றும் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.சமூக செயற்பாட்டு மையம் [ஜெசாக் ] முன்னெடுத்துள்ள ''  எங்களையும் மகிழ்வுடன் பணியாற்ற வழிவிடுங்கள் '' என்ற தொனிப்பொருளில் அமைந்துள்ள செயற்பாட்டின் அடிப்படையில் இன்று காலை [ 07.12.2018 ] யாழ் பஸ் நிலையத்திலிருந்து  ஆரம்பித்த மௌன ஊர்வலம் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தினை வந்தடைந்தது.

அங்கு மங்கள விளக்கு ஏற்றுதலைத் தொடர்ந்து அதிதிகளின் உரைகளுடன்   யு என் எச் சி ர்  பிரதிநிதி  ஊடாக    யு என் எச் சி ர் அலுவலகம்,  அரச அதிபர் , நீதிமன்றம், போலீஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு மகஜரும்  கையளிக்கப் பட்டது.

- யாழ்.தர்மினி பத்மநாதன் -






 






SHARE