Monday, December 24, 2018

வவுனியா ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களின் முயற்சி வெற்றி!

SHARE

வவுனியாவில் நகர் வர்த்தக நிலையங்களில் பெண்களுக்கு அநீதி இழைப்பதாகவும் சில வர்த்தக நிலையங்களில் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று பாலியல் ரீதியான துண்புறுத்தல்கள் இடம்பெறுவதை வெளியுலகுக்கு கொண்டு வந்ததது மட்டுமல்லாமல்

அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வவுனியா வர்த்தக சங்கம் மற்றும் வவுனியா நகரசபையினருக்கும் எழுத்துமூலமான முறைப்பாட்டை தொடர்ந்து

இன்று வவுனியா நகரபிதா வவுனியா நகர வர்த்தக நிலையங்களில் பெண்களின் பிரிவுகளுக்கு பெண்களே பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பாக நகரசபையில் பெண் நகரசபை உறுப்பினரால் கொண்டுவந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்

இதனை தொடர்ந்து நகரபிதாவிற்கும் ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன்

இதனை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய பிரதேசங்களிலும் இவ்வாறான தீர்மானங்களை கொண்டு வந்து சமூக சீர்கேடுகளை குறைக்க முன்வர வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE