Saturday, December 8, 2018

சாரணர்களுக்கான ஊடகப்பயிற்சிப்பட்டறை!

SHARE

யாழ் மாவட் ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில்  சாரணிய மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை  இன்று [ 08.12.2018 ] யாழ்ப்பாணம்   கோண்டாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலையில் ஆரம்பமானது.

இன்று  காலை 7.30 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறும் பயிற்சியின்  தொடராக நாளை  மாலை 4.00மணிக்கு [09.12.2018]  ''யாழ் சாரணர் '' நூல் வெளியீடும் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்.யாழ் சாரணர் நூலினை  ஏ டி சி  ராஜீவன் மற்றும் ஏ டி சி  சம்பந்தன் ஆகியோர் வெளியிட்டு வைக்க  பிராந்திய ஊடகங்களின் ஆசிரியர்கள் பெற்றுக் கொள்வார்கள். பிரதம அதிதியாக   யாழ் மாவட் ட   சாரணர் சங்க செயற்குழுத் தலைவரும்  வடமாகாண ஆளுநரின் செயலாளருமான எஸ் .இளங்கோவன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இரு நாட்களும் இடம்பெற்ற பயிற்சியில் வளவாளர்களாக  வருகை விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான யாழ். தர்மினி பத்மநாதன் ,  சப்தமி காலைக்கூட இயக்குனர் கே. சத்தியன், எஸ் .தூசிகரன் மற்றும் , கே. சுஜீவன்  ஆகியோர் வளவாளர்களாக பங்கு கொண்டு    ஊடகங்களின் பயன்பாடு  , ஒளி ஒலி  அமைப்பு, புகைப்படக் கலை , கலை இலக்கிய படைப்பாக்கம்  என்பன குறித்து  பயிற்சிக்களை வழங்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

- யாழ்.தர்மினி பத்மநாதன் - 
SHARE