Sunday, December 30, 2018

வணிகப் பிரிவில் மட்டக்களப்பு மாணவி முதலிடம்!

SHARE

கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியவர்களில் வணிகப்பிரிவில், மட்டக்களப்பு மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு- வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவி நவனீதன் கிருஷிகா 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தேசிய ரீதியில் 124 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் 2.20614z புள்ளிகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

நேற்று நள்ளிரவு கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீச்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரு இலட்சத்து  67 ஆயிரத்து 907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
SHARE