பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டதாலேயே நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டது என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் உச்சத்தில் இருக்கும் நிலையில் நாட்டு நிலைமைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஷேட சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நாட்டை வீழ்ச்சியடையச் செய்யும் செயற்பாட்டை நிறுத்தும் நோக்கத்திலேயே தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.
இலங்கை நாடு இதுபோன்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.