Monday, December 31, 2018

யாழ். மூளாய் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் – இருவர் காயம்!

SHARE

யாழ். மூளாய் பகுதியில் வீதியில் பயணித்த இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மெற்கொள்ளப்பட்டுள்ளது

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூளாய் பகுதியில் வீதியில் பயணித்த இளைஞர் ஒருவரை, இரு இளைஞர்கள் வாளினால் வெட்டி காயப்படுத்தியதுடன், மற்றுமொரு வயோதிபர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன்,  வாள்வெட்டுக் கும்பலிடமிருந்து மீட்ட  வாள் ஒன்றினையும் பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.

அதேவேளை தாக்குதலுக்கு இலக்கான வயோதிபரும், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகளுக்கமைய வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
SHARE