Friday, December 28, 2018

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம் புத்தாண்டின் முதல் வாரத்தில் மஹிந்தவிடம்!

SHARE

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியையும் இணைப்பதன் மூலம் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சையை தீர்க்க முடியுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ”எதிர்க்கட்சி தலைவர் குறித்த சர்ச்சை ஏற்கனவே முற்றுபெற்றுவிட்டது. அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
SHARE