Monday, December 3, 2018

யாழில். இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சியால் மாணவர்கள் பாதிப்பு – மக்கள் விசனம்!

SHARE

யாழ்ப்பாணம் - வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சி காரணமாக அப்பகுதி பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி எல்லன் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் அதிகாலை வரை இராணுவத்தினரால் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு பலத்த சத்தத்துடன் குறித்த நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் க.பொ.த. சாதாரண தர பரீடசை இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் பரீட்சைக்கு செல்லும் முதல் நாளிலேயே அவர்களுக்கு மனஅழுத்தங்களை கொடுக்கும் வகையில் அதிக ஒலியுடன் இசைக் கச்சேரி நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் மக்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தை உயர்த்த பல தரப்புக்களும் முயற்சி செய்து வருகின்ற நிலையில் இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE