Tuesday, December 4, 2018

வேற லெவலாக அதிகாரபூர்வ வெளியீட்டை அறிவித்த தனுஷ்!

SHARE

தனுஷ் நடித்த ‘மாரி 2’ திரைப்படம் கடந்த சில நாட்களாக டிசம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு வந்தாலும் சரியான வெளியீடு திகதி குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. எனவே வரும் கிறிஸ்மஸ் விடுமுறையின்போது இந்த படம் வருமா? என்ற கேள்விக்குறி தனுஷின் ரசிகர்களிடையே இருந்தது.

இந்த நிலையில் இன்று தனுஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ‘மாரி 2’ திரைப்படம் வரும் 21ஆம் திகதி வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 5இல் அதாவது  நாளை வெளிவரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். டிரைலர் மற்றும் பட வெளியீட்டு திகதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘மாரி’ படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


SHARE