Sunday, December 2, 2018

ஐ.தே.க.வுடன், த.தே.கூட்டமைப்பு கைகோர்த்ததன் காரணத்தை வெளியிட்ட பந்துல!

SHARE

நாட்டில் தீவிரவாதம் வளர்ச்சியடைவதற்கு துணை போகின்ற ஐக்கிய தேசியக் கட்சிதான் இன்று பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் நிதியொதுக்கக்கூடாது என தெரிவித்து வருவதாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, விடுதலை புலிகளுக்கு நிதி வழங்கி காரணத்தினால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.தே.க.வுடன் கைகோர்த்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

மஹிந்தராஜபக்ஷவினுடைய ஆட்சி காலத்தில் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும் அந்த விடயம் இது வரையில் நிரூபிக்கப்படவில்லை. முடிந்தால் ஐக்கிய தேசிய கட்சி அதனை நிரூபித்துக்காட்டட்டும்.

1989 மற்றும் 1990 காலப்பகுதிகளில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக காணப்பட்ட போது அவரது பிரதான ஆலோசகராக செயற்பட்ட ஆர்.பாஸ்கரலிங்கம் என்பவரால் விடுதலைப்புலிகளுக்கு இலட்சக்கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்தே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையினாலேயே நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமற்றதொரு நிலையினை இன்று எதிர்கொண்டுள்ளது என்றார்.
SHARE