Sunday, December 30, 2018

கிளிநொச்சி வெள்ளத்திற்கு அலட்சியம்தான் காரணமா?

SHARE

விடுதலைப் புலிகள் காலத்தில் 'வோக்கி டோக்கி'யுடன் மாங்குளத்துக்கு ஒருவர் அனுப்பப்படுவார்.

மாங்குளம் பகுதியில் வெள்ளம் அதிகரித்தால், அவர் உடனே இரணைமடு குளத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவித்து, அதன் வான்கதவுகளை திறக்கச் செய்வார்.

கணகராயன் ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தால், இரணைமடு குளத்தின் வான்கதவுகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்தமுறை இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 39.5 மீற்றர் அளவிற்கு உயரும் வரையில் வான்கதவுகள் திறக்கப்படவில்லை.

இது அந்த குளத்தின் கொள்ளவை விட 3.5 அடி அதிகமாகும்.

வடமாகாணத்தின் முன்னாள் நீர்த்துறை பொறியியலாளர் ஒருவர் இவ்வாறு சண்டே டைம்ஸுக்கு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தற்போது வடமாகாண ஆளுனரின் உத்தரவின் பேரில் குழு ஒன்று விசாரணை நடத்தி வருகிறது.






SHARE