Thursday, December 6, 2018

காமெடி களத்தில் ஹன்சிகா!

SHARE

தமிழில் மஹா, துப்பாக்கி முனை, 100 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் தீவிரமடைந்துள்ளார் ஹன்சிகா. அதன் காரணமாக என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயப்பிரதா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அதையடுத்து, தற்போது தெலுங்கில் சந்தீப் கிஷன் நடிக்கும் தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் என்ற காமெடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா.

ஜி.நாகேஸ்வர ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் முதன்முறையாக ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா.
SHARE