Sunday, January 27, 2019

வடக்கு மாகாணத்தில் 249 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்

SHARE

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று யாழில் நடைபெற்றது.

அத்துடன், வடக்கு மாகாண அலுவலகங்களில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் வேலை மேற்பார்வையாளர் நியமனம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ்.வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதனடிப்படையில் 249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களும் 33 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களும் மற்றும் 10 வேலை மேற்பார்வையாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் இந்நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டன.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.




SHARE