Thursday, January 31, 2019

இன்றைய ராசிபலன் - 31.01.2019

SHARE

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். 


ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வேைலயாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில்புதிய முயற்சிகள் பலிதமாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 


மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.


கடகம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். 


சிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். சில வேலை
களை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைக் கூடி வரும். வாகன வசதி பெருகும்.உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றி பெறும் நாள்.


துலாம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். கேட்ட இடத்தில் பணம்கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான,சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாகவாங்க வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


தனுசு: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் பிரச்னைகள் வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம்பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.


மகரம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். சிலர் சொத்து வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதி காரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். இனிமையான நாள்.


கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். 

மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
SHARE