Thursday, January 31, 2019

வடக்கு மாகாண சபைக்கு 5 ஆண்டுகளில் ரூபா ஆயிரத்து 725 கோடி நிதி ஒதுக்கீடு!

SHARE

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண திறைசேரியிடம் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது.

2013ஆம் மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்காக (PSDG) 618மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்காக (CBG) 195 மில்லியன் ரூபாவும், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக (TSEP) 310 மில்லியன் ரூபாவும், யுனிசெப் திட்டத்தில் 188.05 மில்லியன் ரூபாவும், 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 28 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2014ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்காக (PSDG) 908 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்காக (CBG) 280 மில்லியன் ரூபாவும், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக (TSEP) 286.47 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்துறை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக (HSDP) 180 மில்லியன் ரூபாவும், யுனிசெப் 50.98 மில்லியன் ரூபாவும், 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


2015ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்காக (PSDG) ஆயிரத்து 440 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்காக (CBG) 400 மில்லியன் ரூபாவும், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக (TSEP) 335.61 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்துறை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக (HSDP) 355 மில்லியன் ரூபாவும், யுனிசெப் 16.43 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்காக (PSDG) ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்காக (CBG) 437 மில்லியன் ரூபாவும், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக (TSEP) 289 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்துறை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக (HSDP) 365 மில்லியன் ரூபாவும், யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாவும், அருகிலுள்ள சிறந்த பாடசாலை (NSBS) 685.35 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2017ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்காக (PSDG) 3 ஆயிரத்து 620.50 மில்லியன் ரூபாவும், பிரமான அடிப்படையிலான கொடைக்காக (CBG) 605.70 மில்லியன் ரூபாவும், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக (TSEP) 252 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்துறை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக (HSDP) 360 மில்லியன் ரூபாவும், அருகிலுள்ள சிறந்த பாடசாலை (NSBS) ஆயிரத்து 153 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2018ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடைக்காக (PSDG) ஆயிரத்து 300.00 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான கொடைக்காக (CBG) 350 மில்லியன் ரூபாவும், பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக (TSEP) 79 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்துறை அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக (HSDP) 324.80 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவ்வாறு 17 ஆயிரத்து 256. 15 மில்லியன் ரூபா வடக்கு மாகாணத்தின் கடந்த ஜந்தாண்டு கால அபிவிருத்திக்காக மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத் தகவல்கள் யாவும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் ஊடாக மாகாண திறைசேரி தகவல் அலுவலரிடமிருந்து தகவலறியும் உரிமை சட்டம் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஆகும்.

இதேவேளை, மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு தருவதாக அறிவிக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி நிதி வழங்கப்படுவதில்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


SHARE