Thursday, January 31, 2019

அஜித் 59 படத்தில் வக்கீல் வேடத்தில் ரங்கராஜ் பாண்டே

SHARE

நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த 2016ம் ஆணடு வெளியான பிங்க் பட ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். சதுரங்க வேட்டை வினோத் குமார் இயக்குகிறார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்க உள்ளார். இது தவிர ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அஜித் இப்படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்க இருக்கிறார். அரசியல்வாதிகளை பேட்டிக்கு அழைத்து அவர்களை மடக்கி, மடக்கி கேள்வி கேட்டு, குண்டக்க மண்டக்க பேட்டி எடுப்பதில் ரங்கராஜ் பாண்டே கில்லாடி. எனவே, அவர் தொடர்பான காட்சிகள் இப்படத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE