Tuesday, January 29, 2019

ரசிகர்கள் தொல்லை : விஜய் 63 படப்பிடிப்பு தொடருமா?

SHARE

விஜய் 63 படப்பிடிப்பு தளத்திற்கு ரசிகர்கள் படையெடுத்து வருவதால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதில் படக்குழுவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜயை வைத்து தெறி, மெர்சல் படங்களை இயக்கிய அட்லி, அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று சென்னை பின்னி மில்லில் படப்பிடிப்பும் தொடங்கியது. இந்த தகவல் ரசிகர்களுக்கு தெரியவர தினமும் ஏராளமான விஜய் ரசிகர்கள் தினமும் அங்கு படையெடுத்து வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதனால், சுதந்திரமாக படப்பிடிப்பை நடத்த முடியாமல் படக்குழு திணறி வருகிறதாம். எனவே, சென்னையில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கலாம் என படக்குழு யோசித்து வருகிறதாம்.

சென்னையில் விஜய் 63 படப்பிடிப்பு நடப்பது விஜய் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.
SHARE