Monday, January 28, 2019

8 நாடுகளில் படமாகும் இந்தியன் 2

SHARE

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் பிடிப்பு பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகி வேடத்துக்கு தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகிறார்கள். இப்படத்தில் கமல்ஹாசனின் மகன் வேடத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக முதலில் செய்தி வெளியானது. அதன்பின் அவருக்கு பதிலாக சித்தார்த் நடிப்பது உறுதியாகியுள்ளது.

அனிருத் இசையில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உலகின் 8 நாடுகளில் நடக்க இருப்பதாக செய்தி கசிந்துள்ளது.
SHARE