Thursday, January 31, 2019

இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் – நடிகர் அதிரடி முடிவு

SHARE

இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்டு நடிகர் வினய் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.

உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், அரண்மனை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் வினய்.. ஹீரோவாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சிறு வேடங்களில் நடித்தார். துப்பறிவாளன் படத்தில் வில்லனாகவும் நடித்தார். ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான நேத்ரா படத்திலும் வில்லனாக நடித்தார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதற்கு அழைப்பு விடுக்க வினயை தொடர்பு கொள்ள வெங்கடேஷ் முயன்றார். ஆனால், இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என முடிவெடுத்த வினய், அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழில் செய்ய சென்று விட்டார் என அவரின் மேனேஜர் பதில் அளித்துள்ளார்.

இதுகேட்டு அதிர்ச்சி அடைந்த இயக்குனர் வெங்கடேஷ் மற்ற நடிகர்களை வைத்து விழாவை நடத்தினாராம்.
SHARE