Monday, January 28, 2019

யாழில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி தாதி உயிரிழப்பு?

SHARE
யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பலனின்றி ஆறு மாத கர்ப்பிணி தாதி ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாதிக்க தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதி உத்தியோகஸ்தராக பணி புரியும் குலதீபன் பிருந்தா ( வயது – 32) எனும் 4 வயது பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த தாதி உத்தியோகஸ்தர் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி குணத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதற்காக கையில் ஊசி மருந்தொன்றை ஏற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை கடமைக்கு வந்த தாதி பிற்பகல் 1 மணியளவில் கடமை முடிந்து வீடு சென்றுள்ளார். அங்கு தனது 4 வயது பிள்ளையுடனும் கணவருடனும் சாதாரணமாகவே கதைத்து விட்டு குளியல் அறை சென்றுள்ளார். பின்னர் உணவருந்தியதன் பின்னர் உறங்கியதாக தெரியவருகின்றது.

இந்தநிலையில் அவர் உறக்கத்திலிருந்து எழுந்திருக்காத நிலையில் பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கணவரால் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள்  சிகிச்சைகள் வழங்கப்பட்டும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE