Friday, January 11, 2019

யாழில்.பொங்கல் தினத்தில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் நடைபெறாது

SHARE

பொங்கல் தினத்தை முன்னிட்டு சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சைகள் அன்றைய தினம் நடைபெற மாட்டாது என யாழ்.மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் பி.பரந்தாமன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் என்பதனால் அன்றைய திகதிக்கு திகதியிடப்பட்ட எழுத்து பரீட்சைகள் அன்றைய தினம் நடைபெற மாட்டாது.

குறித்த பரீட்சையை திங்கள், வெள்ளி தவிர்ந்த ஏனைய வேலை நாட்களில் சாரதி அனுமதி பத்திர கிளையுடன் தொடர்பு கொண்டு பரீட்சை எழுத முடியும். என தெரிவித்தார்.
SHARE