Wednesday, January 30, 2019

புதிய மைதானத் திறப்பும் வருடாந்த விளையாட்டுப் போட்டிகளும்

SHARE

யாழ்ப்பாணம் வரணி இயற்றாலை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டியும், மைதான திறப்பு விழாவும் நேற்று நடைபெற்றன.

பழைய மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் அனுசரணையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மைதானத்தின் பெயர் பலகையை நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து மெய்வன்மைப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலை அதிபர் திருமதி த.ஸ்ரீமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தென்மராட்சிக் கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சோ.திருக்குமரன், தென்மராட்சிக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி சுகிர்தராணி நகுலேஸ்வரன், பழைய மாணவனும் ஸ்ரீபாரதி வித்தியால ஆசிரியருமான த.தர்மசீலன், சுட்டிபுரம் கண்ணகை அம்மன் ஆலய பிரதம குருக்கள்,  சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் உதயசீலன், சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளினது சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர் .



SHARE