வடமாகாணம் தழுவிய இயற்கைவழி விவசாய வாரம் ஆரம்பம்!


புதிய வெளிச்சம் அமைப்பின் அனுசரணையுடன் இயற்கைவழி இயக்கத்தின் ஏற்பாட்டில் இயற்கைவழி விவசாய வாரமாக இம் மாதம்- 08 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாரத்தில் வடக்கின் சகல மாவட்டங்களிலும் இயற்கைவழி ஆர்வலர்களின் பங்கெடுப்புடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் இன்று செவ்வாய்க்கிழமை(08)மன்னாரில் தட்சணமருதமடுவில் பண்ணைப் பெண்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரையும் இடம்பெற்றன.

நாளை புதன்கிழமை(09)அன்று வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் முற்பகல்-10 மணி முதல் பிற்பகல்-01 மணி வரையும், நாளை மறுதினம் வியாழக்கிழமை(10) அன்று கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்துக்கு எதிரில் முற்பகல்- 10 மணி முதல் பிற்பகல்-01 மணி வரையும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை(11) அன்று ஜெயபுரம் பல்லவராயன் கட்டில் அமைந்துள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தின் விவசாயப் பயிற்சிப் பண்ணையில் காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரையும் எதிர்வரும்-12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று மன்னாரில் அடம்பன் பண்ணையில் முற்பகல்-10 மணி முதல் பிற்பகல்-01 மணி வரையும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும்-13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் அமைந்துள்ள மார்கோசா கிறீனில் முற்பகல்-10 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை இடம்பெறவுள்ள நிகழ்வில் இயற்கைவழி இயக்கத்தின் இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும்-14 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று முல்லைத்தீவு கைவேலியில் அமைந்துள்ள செல்வபாக்கியம் பண்ணையில் முற்பகல்-10 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறும்.

பாடசாலை மாணவர்களிற்கான விழிப்புணர்வு, உள்ளூர் விவசாயிகளுடனான கலந்துரையாடல், கிளிநொச்சி-மன்னார் மாவட்டங்களிற்குரிய அங்காடிகள் அறிமுக நிகழ்வு என்பன மேற்குறித்த நிகழ்வுகளின் முக்கிய அம்சங்களாகும்.

மேற் குறித்த நிகழ்வுகளில் அனைவரையும் அவசியம் கலந்து கொள்ளுமாறு இயற்கைவழி இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

மேலதிக தகவல்களிற்கு இயற்கைவழிச் செயற்பாட்டாளர் கு.வசீகரனின் 077 378 8795 அல்லது 075 973 2169 எனும் தொலைபேசி இலக்கங்களுடாகத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

“நஞ்சற்ற உணவையே நாடுவோம் -நம் நிலத்தில் இயற்கைவழி வாழுவோம்.அஞ்சிடோம்… எழுவோம்… மக்கள் ஆரோக்கியமதைக் காப்போம்…” எனவும் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- யாழ் .தர்மினி  பத்மநாதன்  -
Name

cinema news,725,india,75,Jaffna News,1964,Medical,180,news,4494,Popular,6,Rasi Palan,562,religion news,339,Sports News,326,sri lanka news,3584,Technology,125,Today's cinema,85,world news,304,
ltr
item
Yarldevi News: வடமாகாணம் தழுவிய இயற்கைவழி விவசாய வாரம் ஆரம்பம்!
வடமாகாணம் தழுவிய இயற்கைவழி விவசாய வாரம் ஆரம்பம்!
https://2.bp.blogspot.com/-TNlEZRczGsw/XDSU6-dlVVI/AAAAAAAAhIo/j7ocTetGK4wToJ4u6vdOQxaVzk7KjUHzQCLcBGAs/s640/Organic-farming-1.jpg
https://2.bp.blogspot.com/-TNlEZRczGsw/XDSU6-dlVVI/AAAAAAAAhIo/j7ocTetGK4wToJ4u6vdOQxaVzk7KjUHzQCLcBGAs/s72-c/Organic-farming-1.jpg
Yarldevi News
http://www.yarldevinews.com/2019/01/blog-post_58.html
http://www.yarldevinews.com/
http://www.yarldevinews.com/
http://www.yarldevinews.com/2019/01/blog-post_58.html
true
1391562164977580846
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy