Tuesday, January 29, 2019

கிராம மேம்பாடுகளுக்காக அங்கஜன் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டு திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

SHARE

மானிப்பாய் தொகுதியின் சுதுமலை வடக்கு தெற்கு கமக்கார அமைப்பு, மற்றும் சுதுமலை வடக்கு ஈஞசடி ஞான வைரவர் ஆலய நாவலர் சனசமூக நிலையத்திற்கு பெறுமதியான தளபாடபொருட்கள் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.

முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கிராம மட்ட அமைப்புக்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு அமைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாகத்திடம் பாவனைக்காக, இன்று பெற்று கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு தெற்கு கமக்கார அமைப்பு, மற்றும் நாவலர் சனசமூக நிலைய நிர்வாகிகள், வலிகாமம் இணைப்பாளர் திருஞானம் ஞானசீலன்,சுதந்திர கட்சியின் வலி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீஸ்கந்தராஜா , வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் துவாகரன், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், கிராம மக்கள் என நிகழ்வில் இணைந்திருந்தனர்.



SHARE