Friday, January 25, 2019

தீவுப்பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பேரணி

SHARE

போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நயினாதீவு மகாவித்தியாலய மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளனர்.

இந்தப் பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையைச் சூழவுள்ள வீதிகளில் பேரணியாக சென்றது. இதன்போது மாணவர்களால் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மாணவர்கள் பேரணியாகச் செல்லும்போது போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திசென்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவான போதை ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.










SHARE