Thursday, January 31, 2019

காதல்.. சாகசம்.. அதிரடி – தேவ் டிரெய்லர் வீடியோ!

SHARE

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள தேவ் படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ராகுல் ப்ரித் சிங், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தேவ். சாகசத்தை தேடி அலையும் இளைஞரின் வாழ்வில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அந்த இளைஞன் தனது அடையாளத்தை கண்டுபிடித்தானா இல்லையா என்பதுதான் தேவ் படத்தின் கதை என்பது டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் காதலர் தினமான பிப்ரவரி 14ம் திகதி  வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


SHARE