Monday, January 28, 2019

யாழ். உடுப்பிட்டியில் நான்கு மாத பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம்

SHARE

பிறந்து நான்கு மாதங்களேயான தனது பெண் குழந்தையின் மரணத்தில் சந்தேகமுள்ளதாக யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தந்தையார் யாழ். வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த குழந்தை பிறந்து சில நாட்களின் பின்னர் குழந்தையின் மூக்கிலிருந்து இரத்தம் வெளியுள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குழந்தையின் தந்தை வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் குறித்த குழந்தை இறந்து விட்டதாகத் தெரிவித்து நேற்று முன்தினம் சனிக்கிழமை(26)இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவத்தைக் கேள்வியுற்று அதிர்ச்சியுற்ற உயிரிழந்த குழந்தையின் தந்தையான அஜித்குமார் தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகமுள்ளதாக நேற்றைய தினம்(27) வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தந்தையாரின் முறைப்பாட்டுக்கமைய சடலத்தைப் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா பொலிஸாரைப் பணித்துள்ளார்.
SHARE