Sunday, January 27, 2019

குழந்தையைக் கொன்று தானும் உயிரை மாய்த்த தாய்

SHARE

தனது ஏழு மாத குழந்தையைக் கொலை செய்து விட்டு தாயாரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் திம்புள்ள பத்தனை கொட்டகலை ரொசிட்டா தோட்டப் பகுதியில் நேற்று இரவு நடந்துள்ளது.

வீட்டில் எவரும் இல்லாத வேளை, குறித்த தாய் தான் பெற்ற ஏழு மாதக் குழந்தையை வயர் ஒன்றை எடுத்து கழுத்துப் பகுதியில் இறுக்கிக் கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

சம்பவத்தை அறிந்த கணவன் கத்தியால் தன்னை தான் குத்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். கணவன் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏழுமாத குழந்தை மற்றும் தாயின் சடலங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE