Monday, January 28, 2019

கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு குஷியான செய்தி

SHARE

நடிகையர் திலகம் படத்தில் நடித்ததுக்காக 2018ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதுக்கான நாமினேசனில் கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ளார்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் வெளியானது. தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியானது.

தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை இப்படத்துக்கு பல விருதுகள் கிடைத்தன.
இந்நிலையில் 2018ம் ஆண்டுக்ககான சிறந்த நடிகைக்கான 12வது எடிசனல் (12th Annual Edison Awards) விருதுக்கான நாமினேசனில் கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ளார்.

நடிகையர் திலகம் படத்தில் நடித்ததுக்காக கீர்த்தி சுரேஷ் நாமினேசன் செய்யப்பட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்க்கு வாக்களிப்பவர்கள் edisonawards.in என்ற இணையதளத்தில் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE