Sunday, January 27, 2019

திறன் வகுப்பறையினைத் திறந்து வைத்தார் அங்கஜன் இராமநாதன்

SHARE

யாழ்ப்பாணம் நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையினை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் திறந்துவைத்துள்ளார்.

இந்நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் நடராசா தேவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் விவசாய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறன் வகுப்பறையை திறந்துவைத்து, பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார்.

இச்செயற்திட்டத்திற்காக 5 இலட்சம் ரூபாய் நிதி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால்  ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் யோகசாமி ரவீந்திரன், கரவெட்டி பிரதேச செயலாளர் ஈஸ்வரானந்தன் தயாரூபன், திட்டமிடல் பணிப்பாளர் ரகுநாதன் ரஞ்சினி, ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர் கணேசமூர்த்தி, வளவாளர் கனகசபாபதி சத்தியசீலன், கடற்தொழில் நீரியல் வள ஓய்வு நிலை பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி, பரமானந்த ஆச்சிரம நிர்வாக உத்தியோகத்தர் கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணராஜ், ஓய்வு நிலை ஆசிரியர் காந்தன் செல்லத்துரை, பருத்தித்துறை மற்றும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,  ஆசிரியர்கள், மாணவர்கள், என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.







SHARE