Friday, January 25, 2019

யாழ். வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பம்! (Video)

SHARE

வடக்கின் மிகப்பாரிய நுகர்வோர் வர்த்தக கண்காட்சி 10ஆவது தடவையாக யாழில் ஆரம்பமாகியது.

இக்கண்காட்சியானது இன்று (வெள்ளிக்கிழமை) தொடக்கம் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

வடக்கிற்கான நுழைவாயில் என்ற கருப்பொருளில் யாழ். மாநகரசபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வர்த்தக கண்காட்சியினை, யாழ் மாநாகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

தொழில் வழிகாட்டி சேவைகள், விசேட உணவு வகைகள், மருந்து ஆலோசனைகள், கட்டட நிர்மாணப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், உள்ளுர் உற்பத்திகள் எனப் பல்வேறு உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 350இற்கும் மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற 9ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சியில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட்டமையினால், இந்த வருடமும், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இக்கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சி நடைபெறும் 3 தினங்களும் பாடசாலை மாணவர்கள் இலவசமாக கண்காட்சி கூடத்தைப் பார்வையிட முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.




















SHARE