Saturday, February 2, 2019

யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை!

SHARE

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(03) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். திருநெல்வேலி சந்தைப் பிரதேசம், திருநெல்வேலி பாற்பண்ணைப் பிரதேசம், மருதனார்மடம், இணுவில் ஒரு பகுதி, தாவடி, சுதுமலை, கொக்குவில், கோண்டாவில் ஒரு பகுதி, உடுவில் ஒரு பகுதி, சங்குவேலி, மானிப்பாய் ஒரு பகுதி, பிப்பிலி, இராமநாதன் வீதி, அரசடி வீதி, வைமன் வீதி, கோவில் வீதி, ஆஸ்பத்திரி வீதி, மார்ட்டின் வீதிச் சந்தியிலிருந்து ஏ-9 வீதி வரை, நல்லூர் கோவிலடி, றக்கா வீதி, மருதடி வீதி, யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இயற்கை விஞ்ஞான பீடம், பிரிட்டிஸ் கவுன்சில், நாவலர் வீதியிலுள்ள தியாகி அறக்கொடை நிலையம், மந்திகை, மந்திகை அம்மன் கோவில் பிரதேசம், மந்திகை வைத்தியசாலை, சாரையடி, கிராமக்கோடு, கல்லூரி வீதி, வி.எம் வீதி, தம்பசிட்டி, சாளம்பை, ஆனை விழுந்தான், புனிதநகர், நெல்லண்டை, மாதனை, கற்கோவளம், பருத்தித்துறை, பருத்தித்துறை சந்தை, வெளிச்ச வீடு, சிவப்பிரகாசம் வீதி, கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, வல்லிபுரம், வல்லிபுரம் நீர்ப்பாசனம் , மாலுசந்தி, இலகடி, அல்வாய், காந்தியூர், மீசாலை வாகையடிச் சந்தி, மீசாலை டச் றோட் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE