Saturday, February 23, 2019

யாழில் சில பகுதிகளில் நாளை(24) மின்தடை!

SHARE

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(24) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். உடுவில் ஆக் வீதி, உடுவில் ஒரு பகுதி, சங்குவேலி,மானிப்பாய் ஒரு பகுதி,பிப்பிலி,மருதனார்மடம்
ஒரு பகுதி, பத்தனை,சுதுமலை, மாப்பியன்,ஊர்காவற்துறை, கரம்பன்,மெலிஞ்சிமுனை,நாரந்தனை,பொன்னாச்சி கடையடி, நாரந்தனை நீர்ப்பாசனத் திட்டம், புளியங்கூடல்,சரவணை, சுருவில், ஊர்காவற்துறை நீதிமன்றம், ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோயில் பிரதேசம், நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம்,வேலக்கை பிள்ளையார் கோவில் பிரதேசம், அட்டகிரி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE