Wednesday, February 27, 2019

கெய்ரோ பிரதான ரயில் நிலையத்தில் தீ: 25 பேர் உயிரிழப்பு!

SHARE

எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் எஞ்சின் தடுப்பொன்றில் மோதியதில் இன்று   குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவத்துடன், தீ பரவியுள்ளது.

குறித்த அனர்த்தத்தில் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எகிப்தின் ரயில்வே அமைப்பு பாதுகாப்பற்றதாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் குறைந்தளவிலான முதலீடு மற்றும் மோசமான நிர்வாகமே இதற்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு இரு பயணிகள் பேருந்து ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 100இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


SHARE