Tuesday, February 5, 2019

3ஆவது ஆண்டில் யாழ்தேவி இணையம்!

SHARE

சிகரங்களை நோக்கிப் பயணிப்பவர்கள் அறிவர் உச்சங்களின் முன்னதான சிரமங்கள். தடைகளெனத் தோன்றும் கற்களைப் படிகளாக்கிப் பயணிக்க முடிந்தால் மட்டுமே உயரங்களைத் தொட முடியும் . அந்த புரிதலுடனும், வசப்படுமெனும் , நம்பிக்கையுடனும், 2 ஆண்டு எட்டிக் கடந்த எங்கள் ஊடகப் பயணம், இன்று இன்னுமொரு புத்தாண்டில்...

யாழ்தேவி  இணையம் தனது ஊடகப் பயணத்தில் இரண்டு ஆண்டை கடந்து நிற்கின்றது. புதிய சிந்தனைகளை செயலாக்க விளையும் தொடர் பயணம் இது. சாத்தியமா ? எனும் வினா கடந்த விடையின் பயணம். தூரப்புள்ளியைத் தொட்டுவிடும் நம்பிக்கையின் பயணம்.

தமிழ் ஊடகச் சூழலில் எமது வளர்ச்சி ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலானது. எம்மை வளர்த்துக் கொள்வதற்காக, சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிநடத்தும் செயல்களில் ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தி எப்போதும் உண்டு.

குறைகளைச் சொல்லுங்கள், நிறைவாக மாற்றி இன்னும் செல்வோம், இனியவை செய்வோம், எனும் எண்ணங்களை, வண்ண மலர்களெனச் சொரிந்து வழிநடக்கின்றோம். மாற்றங்களுக்குத் தேவை வாழ்த்துக்கள் அல்ல, வழிதொடர்ந்து வாழ்வது மட்டுமே.

3வது ஆண்டை நோக்கிய பயணத்தில்  மேலும் பல புதிய விடயங்களுடன் உங்களுடன் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் ,
SHARE