Monday, February 18, 2019

விஜய் 63 படத்தில் நடிக்கும் சூப்பர் சிங்கர் சிறுவன்!

SHARE

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியாளர் கபீஸ் பூவையர் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.

சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் 10 வருடங்களுக்கு பின் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைக்கிறார். இப்படத்தில் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், டேனியல் பாலாஜி, யோகிபாபு, விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தில், விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 6வது சீசனில் கலந்து கொண்டு பலரையும் கவர்ந்த கபிஸ் பூவையர் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


SHARE