Friday, February 1, 2019

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு விபத்து - ஒருவர் படுகாயம்!

SHARE

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக உள்ள ரயில் கடவை ஒன்றை கடக்க முயற்சித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த புகையிரதமே மோட்டார்சைக்கிள் மீது மோதியுள்ளது. இச்சம்பவம் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் நுணாவில் மேற்கு சேர்ந்த  பாலமகேந்திரா விக்னேஸ்வரன் (28 வயது) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமிக்ஞை விளக்கும் ஒலியும் எழுப்பிய போதும் அதனை பொருட்படுத்தாது புகையிரத கடவையை கடந்ததாகவும் அப்பகுதியில் நின்றவர்களால் கூறப்படுகிறது.
SHARE