Friday, February 8, 2019

யாழ். பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு!

SHARE

யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று (வெள்ளிக்கிழமை) வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன், நேற்று பகிடிவதை எனும் பெயரில் பல்கலைக்கழக 4ஆம் வருட மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் யாழ்.பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் இந்த வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
SHARE