Sunday, February 17, 2019

“நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!

SHARE

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு. சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “ நினைவுகளுடன் பேசுதல்" நூல் வெளியீட்டு விழா இன்று யாழ் இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது

யாழ். ஊடக அமையம் மற்றும் எழுகலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கவிஞர் கை. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் , சத்தியமூர்த்தியின் நினைவுகளை அவரது கல்லூரி நண்பர்களான (91 உயர்தரம்) வட்டு. சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் கோகில வாசன், கவிஞர் வேலணையூர் சுரேஸ் ஆகியோர் பகிர்ந்தனர். அதனை தொடர்ந்து யாழ்.ஊடக அமையம் இணைப்பாளர் இ.தயாபரன், ஊடகவியாளர்களான மதி, இளங்கீரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

சத்திய மூர்த்தியின் கல்லூரி நண்பரும் எழுத்தாளரும் யாழ். இந்துவின் பழையமாணவர் சங்க தலைவருமான தினேஸ்குமார் நூலினை வெளியிட்டு வைக்க சத்தியமூர்த்தியின் சகோதரி பெற்றுக்கொண்டார்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்















SHARE