Saturday, February 16, 2019

மணிரத்னம் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி – பின்னணி என்ன?

SHARE

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகி விட்டதாக செய்திகள் கசிந்து வருகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல வருடங்களாக மணிரத்னம் முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் ஹீரோக்களின் கால்ஷீட். தற்போது மீண்டும் அந்த முயற்சியில் இறங்கியுள்ள மணிரத்னம் விஜய் சேதுபதி, விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டோரை வைத்து இப்படத்தை எடுக்க திட்டமிட்டார். எனவே, எல்லோரிடமும் 6 மாதம் கால்ஷீட் கேட்டுள்ளார்.

ஆனால், நிறைய படங்களில் நடிக்க விஜய் சேதுபதி ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருப்பதால், இந்த படத்திலிருந்து அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவருக்கு பதில் நடிகர் கார்த்தியை நடிக்க வைக்கலாம் என மணிரத்னம் நினைக்கிறாராம். மணிரத்னம் அவரின் குரு என்பதால் அவர் கண்டிப்பாக நடிப்பார் எனத் தெரிகிறது. இன்னும் மற்ற ஹீரோக்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே, இப்போதிருக்கும் நடிகர்களும் வரிசையும் மாற வாய்ப்புண்டு.

எனவே, கால்ஷீட் பிரச்சனை காரணமாக மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் டேக் அப் ஆகுமா இல்லை பேக் அப் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
SHARE