Wednesday, February 27, 2019

மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்!

SHARE

‘பேட்ட’ படத்துக்கு பிறகு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கால்ஷீட் டைரியில் ‘சூப்பர் டீலக்ஸ், சைரா நரசிம்ஹா ரெட்டி, இடம் பொருள் ஏவல், மாமனிதன், சிந்துபாத், துக்ளக் தர்பார், இயக்குநர் விஜய் சந்தர் படம், இயக்குநர் சேரன் படம்’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது.

இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா’ போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கவுள்ளாராம்.

இப்படத்தினை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளாராம். ஏற்கெனவே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பீட்சா, ஜிகர்தண்டா (கெஸ்ட் ரோல்), இறைவி, பேட்ட’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
SHARE