Saturday, February 23, 2019

யுத்தத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவியின் கல்வி வளர்ச்சிக்கு உதவி!

SHARE

முல்லைத்தீவு தேரங்கண்டல் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாணவியொருவருக்கு சேலன்ட் தமிழர் டென்மார்க் அமைப்பின் நிதியுதவியில் யாழ்.மாவட்டத்தைத் தளமாக கொண்டியங்கும் நாமும் இணைவோம் அமைப்பு வாழ்வாதார உதவி வழங்கி வைத்துள்ளது.

கடந்த கால யுத்தத்தால் தனது தாய், தந்தையரை இழந்து நிர்க்கதியான மேற்படி மாணவி தனது அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

இவர் முல்லைத்தீவு தேரங்கண்டல் அ. த. க பாடசாலையில் தரம்-06 இல் கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில் குறித்த மாணவியின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு 75 ஆயிரம் ரூபா பெறுமதியான பசுமாடும், கன்றுக்குட்டியும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நாமும் இணைவோம் அமைப்பின் செயலாளர் நி.நிஜாந்தன் ,அமைப்பின் உறுப்பினர் விஜய்சங்கர், பாடசாலை அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
SHARE